*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

புதன், 13 ஜனவரி, 2010

புன்னகைகளின் விஷங்கள்

த. அஜந்தகுமார்

ன்னைக் கடந்து செல்லும்
முகங்களின் புன்னகைகளை
ஏளிதில் என்னால்
நம்பிவிட முடியவில்லை
புன்னகைகளின்
பின்னால் தடவப்பட்டுள்ள
விஷங்களின் கதிர்கள்
என்னைப் பயமுறுத்துகின்றன
என் முன்னால்
பற்கள் வெள்ளையாய்ச் சிரிக்கின்றன
என் பின்னால்
அவை என்னைக் கேவலப்படுத்தி
வஞ்சகம் செய்கின்றன
எதையும் நம்பிவிடமுடியாதபடி
காலம் என்னைக்
கடந்தபடி இருக்கிறது
ஊரெல்லாம் என் கதைகளை
சொல்லித் திருப்திப்படுகின்றன வாய்கள்
வாய்களில் வழிந்தபடி இருக்கும்
விஷங்களையும் வீணீரையும்
என் கண்கள் கண்காணித்தபடியே இருக்கின்றன
யாரையும் எளிதில்நம்பமுடியாத
அபத்தம் எண்ணி
என் மனம் அழுகின்றது
என் முன்னால்
நீலம் பாரித்த ஒரு நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
ஏன் கண்ணீர்த்துளிகள்
நீலநதியில் சேர்கின்றன
கண்ணீர்த்துளிகள்
என்றோ ஒரு நாள்
நதியைச் சுத்திகரிக்கும்
என்று என் மனம்
நம்பியபடி இருக்கிறது.

3 கருத்துகள்:

  1. Very nice..Every word express the reality..
    we have to think the pure affectionate people around us..Why we have to think others?

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள உங்களுக்கு என் வணக்கம். தங்களின் கருத்துக்கு முதலில் நன்றி. சில விடயங்கள் தொடர்பாக நாம் கவலைப்படக் கூடாது என்று தெரிந்திருந்தும் கவலைப்படாமல் இருக்க முடிவதில்லை.

    அன்புடன் அஜந்தகுமார்

    பதிலளிநீக்கு
  3. உண்மை.. இது கவிஞர்களுக்கு உரிய உணர்வுகள்..
    (சிறந்த கவிதை எழுத தூண்டுகிறது)

    பதிலளிநீக்கு

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner