*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

செவ்வாய், 5 அக்டோபர், 2010

உன் பெயரில் இப்பொழுதும் ஒரு சிலிர்ப்பு இருக்கிறது

இப்பொழுது
யோசிக்கையில்
கொஞ்சம் வெட்கம் அமர்கிறது

நீ அருகில்லாத கணத்தை யோசிக்கப் பயந்தேன்
எனினும் நீ பிரிந்தாய்
கசப்புகளின் கோப்பையோடு
கொஞ்ச நாட்கள் ....
எனினும் ஞாபகம் என்பது
கீழிறங்கிச் சென்று
ஓரடுக்கில் பதுங்கியிருக்கியிருக்கிறது
யாரும் கிளராதபோது
நல்ல பிள்ளையாய்ப் படுத்திருக்கிறது

உன் பெயரை யாரும் சொல்வதை
நான் விரும்பவில்லை
அடுக்கில் இருந்து
மேலெழும் நினைவுகளை
இப்போது  வெறுக்கிறேன்

உனது பெயரில்
இப்பொழுதும்
ஒரு சிலிர்ப்பை உணர்கிறேன்

எனினும் சிலிர்ப்பில்
எனது உடல் கனக்கிறது
நோய்களின் கூடாரமாய்
நானாகுவதாய் பிரமை சுழல்கிறது

நீ வெகு துாரத்தில் இருக்கிறாய்
என் நினைவின்றி இருக்கிறாய்

உன் பெயர்ச்சாவி
என் கதவுகள் எல்லாவற்றையும்
மளமளவென்று திறக்கிறது
தென்றல் புகுந்து வருடிய காலம் இப்போது இல்லை
உடலைச் சல்லடையிடுகிறது புயற்காற்று

எனவே அவள் பெயரை
யாரும் சொல்லற்க.....!

1 கருத்து:

  1. சிலிப்பு வருகிறது அவள் பெயர்சொல்லும் போது என்பதில் எத்தனை நினைவுகள் மீளாய்வு செய்யமுடிகிறது நண்பரே ஓரு பக்கமாக நீங்கள் என் நினைவுகளை மறந்தவள் என்று சொல்லும் அதேகனம் அந்த ஜீவனுக்கி உங்களைப்போல் ஓரு ஊடகம் கிடைத்தால் தன்பக்க வாதங்களை மறுத்துரைப்பாள்.ஓருபக்கம் சாவிக்கதவுகள் பலரிடம் மூடியே கிடக்கிறது சோகம் எனும் உண்மை வெளியே தெரியக்கூடாது என்ற காலத்தின் பயத்தினால்.முதல்முறையாக உங்கள் வலையை இன்றுதான் படித்தேன் நல்லவற்ரை அடையாளம்கான  நேரமும்கைகூடனுமே!

    பதிலளிநீக்கு

அஜந்தகுமாரின் கவிதைகள்
அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்Video Post

Square Banner