காயம் பட்ட நிலத்தில்
நான் வீசப்பட்டிருந்தேன்
தழும்புகளாய் இருந்த தேகநிலம்
என்னை நெருடுகிறது
விழிகள் சுணைத்துக் கொள்ள
ஒரு தாயின் கண்ணீர்
என்னை நனைக்கிறது
ஒரு தம்பியாய் ஊடாடிய
உறவின் அன்பில்
தன் பிள்ளைகள் இழந்த துயர்
சொல்லி அழுகிறாள்
சுனையில் இருந்த
எனது காயங்கள்
உப்பில் இருந்தே உறைந்து
உலைக்கின்றன என்னை
.....................................
உங்களது பிரிவாலான கண்ணீர்
என்னில் உப்பு மூட்டையாகிக் கனக்கிறது
உப்பு மூட்டை சும மாமா என்று
ஓடி வந்து தொற்றும் பிஞ்சுகள்
கண்ணீரினாலான உப்பு மூட்டையாய்
என் நெஞ்சில் கனக்கிறார்கள்
................................
தாயின் ஓலம்
என்னைப் பிளக்கிறது
காயங்களால் நிறைந்திருந்த
எனது அறையெங்கும்
ஓலங்களால் சிதறுண்ட
ஜன்னல் கண்ணாடிகளை
பொறுக்கி
இன்னொரு மூட்டையாய்க் கட்டி
என் முதுகில் தாருங்கள்
...............................
உப்பு மூட்டை சும என்ற
அவர்கள் இல்லை
கண்ணீராலான உப்பு மூட்டை இருக்கிறது
தாயின் ஓலம் உடைத்த கண்ணாடித் துண்டுகளின்
மூட்டை இருக்கிறது
ஒன்று நெஞ்சில் கனக்கிறது
ஒன்று நெஞசைக் கிழிக்கிறது
நான் வீசப்பட்டிருந்தேன்
தழும்புகளாய் இருந்த தேகநிலம்
என்னை நெருடுகிறது
விழிகள் சுணைத்துக் கொள்ள
ஒரு தாயின் கண்ணீர்
என்னை நனைக்கிறது
ஒரு தம்பியாய் ஊடாடிய
உறவின் அன்பில்
தன் பிள்ளைகள் இழந்த துயர்
சொல்லி அழுகிறாள்
சுனையில் இருந்த
எனது காயங்கள்
உப்பில் இருந்தே உறைந்து
உலைக்கின்றன என்னை
.....................................
உங்களது பிரிவாலான கண்ணீர்
என்னில் உப்பு மூட்டையாகிக் கனக்கிறது
உப்பு மூட்டை சும மாமா என்று
ஓடி வந்து தொற்றும் பிஞ்சுகள்
கண்ணீரினாலான உப்பு மூட்டையாய்
என் நெஞ்சில் கனக்கிறார்கள்
................................
தாயின் ஓலம்
என்னைப் பிளக்கிறது
காயங்களால் நிறைந்திருந்த
எனது அறையெங்கும்
ஓலங்களால் சிதறுண்ட
ஜன்னல் கண்ணாடிகளை
பொறுக்கி
இன்னொரு மூட்டையாய்க் கட்டி
என் முதுகில் தாருங்கள்
...............................
உப்பு மூட்டை சும என்ற
அவர்கள் இல்லை
கண்ணீராலான உப்பு மூட்டை இருக்கிறது
தாயின் ஓலம் உடைத்த கண்ணாடித் துண்டுகளின்
மூட்டை இருக்கிறது
ஒன்று நெஞ்சில் கனக்கிறது
ஒன்று நெஞசைக் கிழிக்கிறது