த.அஜந்தகுமார்
அவள் என்னைத் தொடர்வதை
தாங்க முடியவில்லை
தாங்கமுடியாத வெயிலாய்
நிழல்களைத் துவம்சம் செய்யும் நீலக் கண்களுடன்
பரபரத்துத் தொடர்கிறாள்
ஒடுங்குகிறேன்
ஓடுகிறேன்
எனினும் குறுஞ்செய்தியில்
தவறிய அழைப்பில்
என்னைச் சலிப்படைய வைக்கிறாள்
தேவதைகள் பற்றிய அத்தனை கனவுகளையும்
ஏப்பம் விட்டிருந்தாள்
எனது கைபேசியை உடைத்துவிட்டேன்
யாருடனும் கதைப்பதைத் தவிர்க்கிறேன்
எனினும்
அவள் பரப்பும் கதைகளை
காதுகள் கேட்கின்றன
இரக்கமற்ற அவள்
என் மீது காதல் பொழிகிறேன் என்கிறாள்
எந்தத் தேவதைகளும் பேய்களும்
வாராது அடைக்கும் கதவு எங்குள்ளது?
அறியத் தருவீரா ?
இந்த வெயிலில் இருந்து தப்ப
குடை வேண்டும்
(இக்கவிதையில் சில திருத்தங்களுக்கு உதவிய கவிஞர் திருமாவளவனுக்கு நன்றி)
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஅருமையாக உள்ளது நன்றி...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்