*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

சனி, 16 ஜனவரி, 2010

ஈக்கள் கலந்த ஒரு கோப்பைத் தேநீர்---த. அஜந்தகுமார்


நேற்று சுடப்பட்டு இறந்து போனவனின்
மூச்சின் இறுதி இழை
காற்றில் வருகிறது கலந்து.

ஈக்கள் அவன் மூக்கிலும் வாயிலும்
இரத்தம் கொட்டிய இடத்திலும்
மொய்த்துக்கிடந்து
அவனின் இறுதிச் சொற்களைத்
தம்மோடு எடுத்துச் சென்றன

யாராவது ஒருவனின்
சாப்பாட்டுக் கோப்பையில்
தேநீர்க் கோப்பையில்
மலக்குழியில்
அந்த ஈக்கள் இருக்க முயற்சித்தாலும்
இறந்தவனின் சொற்களைக் காவும் ஈக்களை
எல்லோரும் கலைத்துக் கொண்டே இருக்கிறார்கள்

கலவரம் நிறைந்திருக்கும் அவர்களின் முகத்தில்
இறந்துபோனவனின் முகவிகாரம் இறுகிக் கிடக்கிறது

நாம் எல்லோரும் அந்த ஈக்களைக்
பிடித்துக் கசக்கி
தேநீருள் போட்டு:
நுள்ளான் சாப்பிட்டால்
நூறாண்டு வாழலாம் என்பது போல்
குடிப்போம்!
குடிப்போம்!!
வாழ அதுவே வழி

2 கருத்துகள்:

 1. அன்புடன் அஜந்தகுமார் வணக்கம்...
  தங்களின் பல கவிதைகளை ஆவலுடன் படித்திருக்கின்றேன். தங்களின் பெரும்பாலான எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்து, அதன் பரிமாணங்களில் என்னை பயனிக்க வைத்துள்ளன. அந்த வகையில் இக்கவிதையும் போரின் காலத்தைய யாழ்ப்பாணத்து சூழலை மிக தெளிவாக காட்டுகின்றது.

  "கலவரம் நிறைந்திருக்கும் அவர்களின் முகத்தில்
  இறந்துபோனவனின் முகவிகாரம் இறுகிக் கிடக்கிறது"

  என்ற வரிகளில் சமூகத்தை, அதன் நிலையினை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றீர். வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  பிதானி.

  பதிலளிநீக்கு

அஜந்தகுமாரின் கவிதைகள்
அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்Video Post

Square Banner