*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமார் க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக தொகுத்து வெளியிடும் சிறுகதைத்தொகுதி விரைவில் வெளிவருகிறது*

அப்பாவின் சித்திரம் -


---த.அஜந்தகுமார்


மௌனத்துள் இறுகிச்
சொருகிக் கிடக்கும் உன் வாழ்வு

ஏதேதோ நினைவுகளில்
உன் உலகம் இருத்தல் கூடும்

என்னப்பா என்று ஏதும் கேட்டால்
உன்பாட்டில் மெல்லிய புன்னகை தெளித்து
விலகிச் செல்வாய்

கடவுளின் கருணையிலும்
உன்னால் நான் சந்தேகம் கொண்டேன்

உன் விரல்கள் எழுதும்
மொழிகள்
விளங்க முடியாதவையாய் மாறி வருகின்றன

உன் விழிகளின் பிரகாசம் குன்றி
வருவதை
மரணத்தின் வாசலாய் எண்ணிப் பயங்கொள்கிறாய்

எனது எந்தச் சமாதானங்களுக்குள்ளும் சிக்காது
தனித்து வருகிறாய்

கடவுளின் கருணையிலும் உன்னால்
நான் சந்தேகம் கொள்கிறேன் 23012010

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Fish