
கவிதைகள் உன்னைச் சுற்றியே திரிகிறது
காற்றின் திசைகளில் கவிந்து கிடக்கும்
உன் திருமுகத்தை
நினைவின் ஆழ் சுழிகளில் மூழ்கி முத்துகிறேன்
எனது வலிகள் ஒப்பிக்க முடியா மொழியில்
கீறிக் கிளர்கிறது
நினைவடங்கா வெளியில்
நனவுகளின் இரத்தம் பரவுகிறது
மாறிக் கொண்டிருக்கும் காட்சி
இயலுமையின் கைகளிலும் இயலாமை
குருஷேத்திரம் நிகழ்ந்தபடியிருக்க
புறாக்கள் இரத்தச் சிறகுகளோடு காதல் கொள்கின்றன
நீயும் நானும் வெளிகளில் வீசப்பட்டிருக்கிறோம்
உனது திசையை நானும்
எனது திசையை நீயும்
முகர்ந்தபடி .......
கால நாக்கில் ஒட்டப்பட்டிருக்கிறோம்
வாரத்தைகள் நமதானவை
எங்கிருந்து பேசினாலும்
நாம் முகம் பார்த்துப் பேசியபடியிருக்கிறோம்
2006
''எங்கிருந்து பேசினாலும்
பதிலளிநீக்குநாம் முகம் பார்த்துப் பேசியபடியிருக்கிறோம்''
nice Ajantha kumar
இலக்கணப்பிழை. ஒருமை பன்மை விகுதி அமைதி குன்றியுள்ளது.
பதிலளிநீக்குஇலக்கணம் மீறிய கவிதையாகக் கொள்ளலாம்.
எனினும் கவனம் இருத்தல் அவசியம்.
நல்ல கவிதை
காருண்யன்.
அதாவது கவிதைகள் என்றால் திரிகின்றன என்றும்
பதிலளிநீக்குவலிகள் என்றால் கிளர்கின்றன என்றுமே வரும்.